ஒரு கடந்த கால எண்ண ஓட்டம்
திருமண வாழ்வின் முப்பதாம் ஆண்டு பிரவேசம்
இருமன ஒருமைப்பாட்டின் அதிசய ராகம்
இருவேறு துருவங்களாய் இருந்தும் என்?
ஒரு வழியாய் கடந்து விட்டோம் ஆண்டுகள்
இருபத்து ஒன்பதை ஆம்
ஆண்டுகள் இருபத்து ஒன்பதை
கடந்து வந்தபாதை எப்படி
கரடு முரடான கற் பாதையா
முட்கள் நிரம்பிய காட்டு வெளியா
எப்படியாயின் என்? கடந்து விட்டோம்
ஆண்டுகள் இருபத்து ஒன்பதை ஆம்
ஆண்டுகள் இருபத்து ஒன்பதை
பிரசவ வேதனையை ஈன்ற சேயை கண்டதும்
மறக்கும் தாயென
பிரசவித்த வேதனையை மறந்தேன் உங்கள்
வளர்ச்சியில் - ஆம்
குழந்தைகளாகிய உங்கள் வளர்ச்சி கண்டு அப்-
பழுக்கற்ற பத்தரை மாற்று தங்கங்களை கண்டு
பெற்றவளாக என் கடமையை செய்தேனா
உற்ற துணையாக இது நாள் வரை இருந்தேனா
சுற்றம் போற்ற நடந்தேனா எல்லாமே கேள்விக்குறி
இருந்தும் என் முடித்துவிட்டேன் திருமண
ஆண்டுகள் இருபத்து ஒன்பதை
முட்கள் நிரம்பிய ரோஜாவா
சேற்றில் மலர்ந்த தாமரையா _ அல்லது
கள்ளிச் செடியா - எப்படி நான்?
கேட்டுக்கொள்கிறேன் என்னையே நான்
செய்யும் தொழிலே தெய்வம் என
இருந்து விட்டேன் அது என் தவறா
என் கடமை இல்லையா
தெரியவில்லை ஆயின் குற்ற உணர்ச்சியால்
குன்றிப் போகிறேன் _ காலம் கடந்த தெளிவு
என் செய்வேன்?
சின்னம்சிறிய சிறார்களான உங்களை
சிறிதும் அச்சமின்றி விட்டுச் சென்றேன் தனித்தே
அறுவை சிகிசைக்குத் தான் _
சிந்தித்திருக்க வேண்டுமோ - சுயநலத்தால்
மறந்தேனோ எப்படியாயின் என்?
தவறி விட்டேன் கடமையில்
காலம் கடந்த தெளிவு - என் செய்வது
உந்தன் பாராட்டு எங்கள் கடமைகளை
ஓரளவு நிறைவேற்றியமைக்கு மிகவும்
அதிகம் தான்
ஆயினும் பூரித்துப் போகிறேன் உந்தன் நன்றியறிதலில்
என்னால் இனி செய்ய முடிந்தது எல்லாம்
மக்கள் செல்வங்களாகிய உங்களை
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
வாழ்க வாழ்க பன்னெடுங்காலம்
வாழ்க வாழ்க ஆரோக்கியமாய்
வாழ்க வாழ்க பாரோர் போற்ற
வாழ்க வாழ்க வளம் பல பெற்று
வாழ்க வாழ்க மெய் க்யானம் பெற்று - என
உளமாற உவகையோடு வாழ்த்துவது தான் - எங்களின் இத்
திருமண நன்னாளில்
வாழ்க வளமுடன் இவ்வையகம் உள்ள மட்டும்
வாழ்க வளமுடன் ஓங்குக உம் புகழ்!
1 Comments:
Intha ragavan ippothu enge
Post a Comment
<< Home